Thursday, August 21, 2014

Thirumanjana Kattiyam Compiled by Sangendhi Dr S Muthu Batter, Chennai (It should be recited at the time of Lord Vishnu's bath in the Hindu Temple)

ஸ்ரீ:
ஸ்ரீமத்விகனஸமஹாகுரவே நம:
திருமஞ்சன காலத்தில் ஸேவிக்க வேண்டிய கட்டியம்
(தொகுத்தவர் சங்கேந்தி டாக்டர் ஸ்ரீ முத்து பட்டர்,சென்னை)

நாயிந்தே! நாயிந்தே! ஜய விஜயீ பவ! தேவ தேவோத்தம தேவகம்பீர தேவதாஸ்ஸார்வபௌம! பராக்! ஸ்வாமின் பராக்!

லக்ஷ்மீநேத்ரோத்பலஸ்ரீ ஸத்த பரிசயாதேஷ ஸம்வர்த்தமான:
நாபீநாலீகரிங்கண்மதுகரபடலீ தத்த ஹஸ்தாவலம்ப:
அஸ்மாகம் ஸம்பகதோகான் அவிரலதுளசீ தாமஸஞ்ஜாத பூமா
காலிந்தீ காந்திஹாரீ கலயது வபுஷ: காலிமாகைடபாரே
ஸமஸ்த ஜனனீம் வந்தே சைதன்ய ஸ்தன்ய தாயினீம்
ச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸ்ஸ்ய கருணாமிவ ரூபிணீம்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிப் படைத்த பெருமான்!
மண்ணும் நீரும் எரியும் நல்வாயும் விஷ்ணுமாய் விரிந்த எம்பெருமான்!
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்களிரண்டாய் சிவனாய் அயனாய் நின்ற எம்பெருமான்!
மாயாவாமனநே மதுசூதா, தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நின்ற எம்பெருமான்!
கலைமகளும் வேதமும் நீதிநூலும் சொற்பொருள்தாமும் மற்ற நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட மலைகளும் மாமணியும் அலர்மேல்மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போல் நின்ற எம்பெருமான்!
கொண்டல் மாருதமும் கரைகடலேழும் ஏழு மாமலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான்!
ஈருலகைப் படைக்க எண்ணி இருந்த பெருமாள்!
எழில்மலரோன் தன்னையன்று ஈன்ற பெருமாள்!
மாருதமண்ணீராகுமான பெருமாள்!
வானோடேரிதாமாகும் நின்ற பெருமாள்! சூரியர்கள் தம்முடனே துங்கும் பெருமாள்! சுரர்களுக்கு அன்று அமுதருள் தந்த பெருமாள்! வாரிதிசூழ் வையகமும் வாழ்வித்த பெருமாள்! தருமன் விடத்தான் தூதுபோன பெருமாள்! தரணி பொராத்தின் பாரம் தவிர்த்த பெருமாள்! அருமறையின் பொருளனைத்தும் விரித்த பெருமாள்! அதுதன்னை அன்றயனுக்கு அளித்த பெருமாள்! மஞ்சனை செய் பூதனையை மாய்த்த பெருமாள்! மல்லர்மதகரி மாளமலைந்த பெருமாள்! வொஞ்சொல் தரவீடு கொடுத்துகந்த பெருமாள்! விலக்கில்லா வழி நடத்த விரைந்த பெருமாள்! பாண்டவரை பல வகையும் காத்த பெருமாள்! பாஞ்சாலி குழல் முடித்த எம்பெருமான்!

குன்றால் குலிர்மாரித் தடுத்துகந்தகோனே! கானார் கரிகொம்பு அதொசித்த களிறே! வேடார் திருவேங்கடம் மேய விளக்கே! கல்லால் கடலை அணைகட்டி உகந்த களிறே! கோலால் நிறைமேய்த்த என் கோவலர்கோவே! வராகமதாகி இம்மண்ணையிடந்த நரநாராயணனே! கன்றால் விளங்காய் எரித்த என் கண்ணனே! நந்தா விளக்கே அளந்தற்கரியாய் நரநாராயணனே! எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின் சொற் பொருளாய் நின்ற என் கற்பகமே! உலகளந்த மாணிக்கமே என் மரகதமே! மற்றுப்பாரை இல்லை ஆணிப்பொன்னே! மீனோடாமே கோழல் கோளரியாய் வானாற் கோளாய் மழுப்படை முனியாய் பின்னும் இராமர் இருவராய் பாரில் துன்னிய பாரம் தீர்த்து ஐவரை காத்த மன்னனுமாய் கலிதவிர்த்தருளும் கற்கியாய் நின்ற என் கண்ணனே! மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிற்றில் அடக்கி ஆலின்மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசனே! பொற்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதஞ்சோராமே ஆள்கின்ற எம்பெருமான்! நின்விழிசுற்றி வாழியாட, வரிகமழ் துளவாட, திருமார்பு சதங்கையாட, உயர்புருவ நிழலாட, ஒருபதம் அசைந்தாட, ஒருபதம் இசைந்தாட, உள்ளேகனிந்து, நைந்தே சிரித்து, அடியவர் கொண்டாட, நின் நடையழகை என்று காண்பேன்?

சிவன், சதுர்முகன், விகனஸாசாரியன், வேதாந்தவாரியன் கண்டுகளித்து பல்லாண்டு பாடும் தேவனே, பலமொழிவாய் நால் வேதவாணர்களும் சித்தர்களும் தொழுதேத்தும் ஸ்ரீமன்நாராயணனே, பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை துணியாமுராமை உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய் பிறந்தார் இமையோர் தலைவா மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே!

சந்தன காப்பு கட்டியம்

த்வம்மேSஹம்மே குதஸ்தத் ததபிகுத இதம் வேதமூலப்ரமாணாத்
ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விவபாத் ஸோSபி ஸாக்ரோஸயேவ.
க்வாக்ரோசாகஸ்யகீதாதிஷு மம விதித: கோத்ர ஸாக்ஷீஸ்ஸதீஸ்யாத்
ஹந்த த்வத்பக்ஷபாதீ ஸ இதி ந்ருகலே ம்ருக்யமத்யஸ்யவத்வம்..
ஏலாஜாதி லவங்க சம்பகமீலத்தக்கோலமுஸ்தாநிஸா
யுக்மோஸீர படீரஸாரவிலஸத் கர்பூரகாஸ்மீரவத்
ஸ்நாநீயம் தபநீய பாஜனம்ருதம் தீர்த்தம் க்ருதார்த்தம் குரு
ஸ்னானேனாத்ய வ்ருஷாத்ரி நாதஜனதா த்ராயஸ்வ தாபத்ரயாத்.

கௌசிகன் வேள்வியைக் காத்தலிக்க ஓடி வந்த வேர்வையாரவோ!
கூறுசிலையால் தாடகையை கொன்றுகந்த கலையாரவோ!
மண்மகளை மண்புரிய மன்னவர்கள் மனம் மறுவ விண்ணவர்கள் விரும்பி நிற்க விண்மகளும் விடைகொடுக்க வென்னேன் என்று வில் முறித்த விடாய் தீரவோ! பரசு முனிவன் பகை அனைத்தும் பரக்கச் சினம் கொண்ட ச்ரமம் தீரவோ! மாய கதுகைடபரை மடித்திட்ட இளைப்பாரவோ! ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண்வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தறாகவொண்ணா மாவலியை சிறையில் வைத்த ச்ரமம் தீரவோ! அண்டகமும் இவ்வலைகடலும் அவணிகளுமெல்லாம் உண்டதனால் உண்டான விடாய் தீரவோ! பரந்திட்டு படுகடல் தன்னை இரந்திட்ட கைமேல் எறிநிரைமோத கரந்திட்டு நின்ற கடலைக்கலங்க சரந்தொட்ட களையாரவோ! குரங்கினத்தாலே குறைகடல் தன்னை நெருக்கி அணைகட்டி நின் நீரிலங்கை அரக்கர் அவிய அருகணையாலே நெருக்கிய ச்ரமம் தீரவோ! அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளந்திட்ட வானாகிச் சிங்கவுருவாய் உள்ள தொட்டிரணியன் ஒன் மார்பகலம் பிளந்திட்ட சிரமம் தீரவோ! அடைந்திட்டமரர்கள் ஆழ்கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம்சுற்றி வாசுகின் கயிறாக கடைந்திட்ட களையாரவோ! கலையிலங்கு மகலல்குல் அரக்கர் குலக்கொடியை காதோடு மூக்குடனறிய கதறியவளோடி தலையிலங்கை வைத்து மலையிலங்கை புகச்செய்த ச்ரமம் தீரவோ! வலிவணக்குவரை நெடுந்தோள் விராதைகொன்று வன் தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி கலைவணக்கி நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி சிலை வணக்கி மான்மறிய வெய்த ச்ரமம்  தீரவோ! ஆநிரை மேய்க்க நீபோதி அருமரும் தாவதறியாய் கானகமெல்லாம் திரிந்த உன் கரிய திருமேனி வாட்டம் தீரவோ! பூமகளும் பார்மகளும் புகழ்ந்து தந்த போக மயக்காரவோ! பார்மகளை பிரிந்து உடம்பதைத்து நின்ற தாபம் தீரவோ! உத்தமவமர்த்தவ அவைத்ததோரெழில் தருயர்த்த கணையால் அத்திரவரக்கன் முடிபத்துமொரு கொத்தன உதிர்த்த்தனால் உண்டான விடாய் தீரவோ!

தோளிணைமேலும் நண்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணைமேலும் புணைந்த தண்ணற்துழாய் நான் அம்மனார் தேவரீர் திருமகள் மண்மகள் நீலாலமுதலா எல்லாத்தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க, மாணிக்கம் கட்டி வைரமிடைகட்டி ஆணிப்பொன்னால் செய்த திருமஞ்சன வேதியிலே எழுந்தருளியிருந்து, நம் விகனஸாசாரியன் கண்டுகளித்து பல்லாண்டுபாட, அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு, பன் பெருவானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய, மண்ணுலகில் மனுசருய்ய, துன்பமிகு துயரகல அயர்வொன்னில்லா சுகம் வளர, அகமகிழும் தொண்டர்வாழ, என் மணியே மாணிக்கமே என்னுடைய இன்னமுதே மஞ்சமாடி அருள்வதே!
ஜெயவிஜயீ பவ! அருளப்பாடு ஸஹஸ்ரதாரா சங்கதாரா பத்மதாரா பட்டர் மங்கள புருஷஸூக்தம்.
லக்ஷ்மீவல்லப ஸங்கல்ப வல்லபாய மஹாத்மனே.
ஸ்ரீமத்விகனஸே பூயாத் நித்யஸ்ரீர்நித்ய மங்களம்.
மங்களானி பந்து


2 comments:

Unknown said...

Very Nice Sir. Thank you
prinatgi

Unknown said...

2nd time very nice sir
prinatgi