Wednesday, May 8, 2019

Moksha-svarupa in Vaikhanasa Bhagavat Sastra

ஸ்ரீ:
ஸ்ரீமத்விகனஸமஹாகுரவே நம:

ஸ்ரீவைகாநஸ பகவச்சாஸ்த்ரத்தில் மோக்ஷஸ்வரூபம்
(டாக்டர் எஸ். முத்து, இணைப்பேராசிரியர், ஸம்ஸ்க்ருதத் துறை, இராமகிருஷ்ணாமிஷன் விவேகானந்தா கல்லூரி, மைலாப்பூர், சென்னை–4)
(This paper presented at National level Seminar on Agama, Silpa, Vaidya & Jyotisha, TMSSM Library, Thanjavur-9, 29th June 2018)
இப்பூவுலகில் ஸ்ரீமந்நாராயணனின் அர்ச்சாவதார விக்ரஹத்தை வழிபடும் முறைக்கு பகவச்சாஸ்த்ரம், ஆகமம் என்று பெயர். இந்த பகவச் சாஸ்த்ரத்தில் ஒரு ஆலயம் கட்டுவதன் ஆரம்பம் முதல் அதில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்வதும் திருவாராதனமும் உத்ஸவாதிகள் செய்வதும் ப்ராயச்சித்தங்கள் செய்வதும் போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இந்த பகவச்சாஸ்த்ரத்தை ஸ்ரீமந்நாராயணனின் மானஸபுத்திரரான ஸ்ரீவிகநஸமுனி வேதத்தின் அடிப்படையில் ஏற்படுத்தினார். இவர் ப்ருகு, அத்ரி, மரீசி, கச்யபர் ஆகிய நான்கு மஹரிஷிகளுக்கு பகவச்சாஸ்த்ரத்தை முழுவதுமாக உபதேசித்தார். எனவே இச்சாஸ்த்ரத்திற்கு ஸ்ரீவைகாநஸம் என்று பெயர் ஏற்பட்டது. இம்மஹரிஷிகளால் இயற்றிய நூல்களே மாத்ருகோசங்களாகும். இந்த சாஸ்த்ரத்தைப் பற்றியும் இதன் வழிவந்தோர்களைப் பற்றியும் ச்ருதிஸ்ம்ருதிகளிலும் இதிஹாஸ புராணங்களிலும் குறிப்புகள் காணக்கிடைக்கிறது.

இந்த ஸ்ரீவைகாநஸ பகவச்சாஸ்த்ர முறைப்படி திருப்பதி, ஒப்பிலியப்பன் கோவில், குணசீலம், திருவல்லிக்கேணி போன்ற திவ்யதேசங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் இன்றளவிலும் திருவாராதனம் உத்ஸவாதிகள் போன்றவை வெகுச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவர்கள் இப்பூவுலகில் இருப்பவர்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதற்க்காகவே எம்பெருமானை தினமும் அர்ச்சிக்கின்றனர். सर्वे च सुखिनः सन्तु। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चिद्दुःखमाप्नुयात्।  இவ்வாறு இச்சாஸ்த்ரத்தை கடைபிடித்துக்கொண்டு இருப்பவர்களின் மோக்ஷோபயம் அதன் ஸ்வரூபம் பற்றி ஸ்ரீவைகாநஸ க்ரந்தங்கள் சிறப்பாகக் கூறியுள்ளது.

ஸ்ரீவைகாநஸத்தில் ப்ருகு, அத்ரி, மரீசி, கச்யப மஹரிஷிகளைத் தொடர்ந்து ஸ்ரீநாராயணாசார்யர், கேசவாசார்யர், ந்ருஸிம்ஹாசார்யர், ராகவாசார்யர், ராமாசார்யர், கோவிந்தாசார்யர் என பல மஹான்கள் அவதரித்தனர். இச்சாஸ்த்ரத்திற்கு இவர்களால் பற்பல க்ரந்தங்கள் பண்ணப்பட்டன. आचार्यवान् पुरुषो वेद என்று ஆசார்யனைக் கொண்டு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேத வாக்கியத்தினடிப்படையிலும், காச்யப மஹரிஷியின் ஞானகாண்ட க்ரந்த்ததில் கூறியபடி एवं संसारसमुद्रोत्तरणोपायं ज्ञानयोगं च ब्रह्मणा पुरा मम प्रणीतं तदेव युष्माकं मया च उक्तं ज्ञानोपदेशं गुरुशिष्यमार्गेन ज्ञात्वा परमात्मानं सदा पश्येत् । இந்த ஸம்ஸாரக்கடலைத் தாண்டுவதற்கு உபாயமும் ஞானயோகமும் ஸ்ரீவிகநஸரால் முதலில் எனக்கு உபதேசிக்கப்பட்டது. இதை குருசிஷ்ய முறைப்படி அறிந்து பரமாத்மாவை எப்போதும் காணவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தை அடையும் மந்த்ரார்த்தங்களை குருவின்மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.

அர்த்தபஞ்சகத்தில் (அறியத்தக்க ஐந்து பொருட்களில்) - 1.அடையத்தக்க (ப்ராப்யமான) பரமாத்மாத்மாவின் (ப்ரஹ்மத்தின்) ஸ்வரூபம், 2.அடைபவனான ப்ரத்யகாத்மாவெனும் ஜீவனின் ஸ்வரூபம், 3.ஜீவன் பரமாத்மாவை (ப்ரம்மத்தை) அடைவதற்கு உபாயம் (ஸாதனம்), 4. ஜீவன் பரமாத்மாவை அடைந்து பெறும் பலன், 5. ஜீவன் பரமாத்மாவை அடைவதற்குத் தடையை ஏற்படுத்துபவை என இவ்வைந்தையும் தெரிந்துகொண்ள்ள வேண்டும். இதன் பின்பு தான் தத்வங்களை அறிந்து ப்ரக்ருதி புருஷனைத் தெரிந்துகொண்டு ஈச்வரனை நிரூபணம் செய்து ஸித்தஸாத்ய வஸ்துவை தியானித்து (ஆராதனத்தால்) அர்ச்சையால் மோக்ஷத்தை அடையும் முறை அனுபவிக்கப்படுகிறது.
1. विष्णुः सर्वेषामधिपतिः परमः पुराणः। परोलोकानामजितो जितात्मन् भवतेभवाय।
सुसूक्ष्मः सार्वसर्वेषामन्तरात्मा तस्थुस्तस्थुषां जङ्गमो जङ्गमानाम्। विभुर्विभूणां विभवोद्भवाय।
सत्यस्सत्यस्थ सत्यलोकस्थस्सत्यस्सज्जनित्रमासीत्। सत्यस्सत्याय रम्हसे।
यो वा भूतेर्भूतिरासीत्सावानन्दं प्रत्यानन्दम्। सजुषं व्रजामि सत्यं सत्याय।
இந்த ஸ்ரீவைகாநஸ பாரமாத்மிக உபநிஷத் மந்த்ரங்களால் விஷ்ணுவானவர் அனைவருக்கும் தலைவனாகவும் அவருக்குமேல் ஒருவரும் இல்லாதவராக இருப்பவராகவும், அனைவருக்கும் மிக நுண்ணியவராகவும், அனைவரோடும் தொடர்புடையவராகவும், ஸத்யமானவராகவும் ஸத்யமான அனைத்திலும் இருப்பவராகவும், ஸத்யமான லோகத்தில் இருப்பவராக உள்ளவரே பரமாத்மா.
सुवर्णवर्णं रक्तास्यं रक्तनेत्रं सुखोद्भवम्। शुकपिञ्छाम्भरधरं विष्णुं प्रणवरूपिणम्।।
இவர் பொன் நிறத்தையுடையவராய், சிகப்பான வாயையுடையவரும், சிவந்த கண்களையுடையவரும், பார்ப்பவர்களுக்கு நன்மையைத்தருபவரும், கிளியினுடைய நிறைத்தைப்போன்று ஆடைஅணிந்திருப்பவரும் ப்ரணவஸ்வரூபமாயும் லக்ஷ்மியோடு கூடிய பகவான் (ப்ரஹ்மத்தின்) ஸ்வரூபம் ஆகும்.
 2. அனாதியான அக்ஞானத்தினால் ஏற்பட்ட புண்ய பாபங்களையுடைய பலனை அனுபவிப்பதற்காக தேஹங்களினுள் நுழைந்ததே ப்ரத்யகாத்மாவெனும் ஜீவனின் ஸ்வரூபம் ஆகும்.
3. ப்ரபத்தியைக் கொண்டு பகவானை ஆராதிப்பது உபாயமாகும்.
4. ஆராதனத்தினால் முக்தியை மோக்ஷத்தை அடைவது பலனாகும்.
5. பகவானின் கட்டளையாயிருக்கும் ச்ருதி ஸ்ம்ருதிகளை மீறுவது தடையாகும்.
பரமாத்மா ஜீவனுடைய கைங்கர்யங்களை ஏற்றுக்கொண்டு பரமன் ஆராதிக்கப்படுபவனாகவும் ஜீவன் ஆராதிப்பவனாகவும், பரமன் சரீரி எனப்படும் ஆத்மாவாகவும், ஜீவன் அவனுக்கு சரீரமாகவும் இருப்பவர்களே பரமாத்மா ஜீவாத்மா எனப்படுவர்.
தத்வத்ரயம் - மோக்ஷத்தைப்பற்றி அறிவதற்கு நாம் மூன்று விஷயங்களில் அறிவுத் தெளிவு பெறவேண்டும். 1. மூலப்ரக்ருதியாகிய அசித்து, 2. ஆத்மா எனப்படும் சித்து, 3.பரமாத்மா எனப்படும் ஈச்வரன்.
द्वा वेतौ पक्षी अचरञ्चरन्तौ नोधुरं व्यधुनीते। यच्चैको भुनक्ति भोक्त्रे।। இந்த மந்த்ரம் பாரமாத்மிகோபனிஷத்தில் நான்காவது அனுவாகத்தில் இரண்டாவது மந்த்ரமாகும்.
அசையாதொரு மரத்தில் ஸஞ்சரிக்கும் இரண்டுபக்ஷிகள் ஒன்று சித்தாகவும் மற்றொன்று அசித்தாகவும் யச்சப்தத்தினால் ஈச்வரனும் கூறப்படுகிறது. இங்கு தத்வங்கள் மூன்றாகக் கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்டுள்ள இரண்டுபக்ஷிகள் என்பது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஆகும். அசையாதொன்று என்று மூலப்ரக்ருதி கூறப்படுகிறது.  எந்த ஒரு பரமாத்மாவானவன் போக்தாவான ஜீவனையும், போக்யமான ஜீவனையும் உண்கின்றானோ என்று கூறப்பட்டுள்ளதன் காரணம் யச்சப்தத்தால் சொல்லிய ஈச்வரன் ப்ரளயகாலத்தில் ப்ரக்ருதி புருஷர்களை ஸம்ஹரிக்கிறான் என்று விளக்கியுள்ளது. இந்த தத்வங்களை எப்போதும் அடிப்படையாகக்கொள்ள வேண்டும். மரீசி மஹரிஷியும் இதையே –
माया प्रकृतिः, मायी विष्णुः। प्रकृतिपुरुषावेतावनादी। என்கிறார்.
இங்கு ப்ரக்ருதி என்பது மாயை, மாயீ என்பது விஷ்ணு, சித்தும் அசித்தும் ஈச்வரனுக்கு அடிமைப்பட்டவை ஆகும். இங்கு கூறப்பட்டுள்ள மாயையான ப்ரக்ருதியே விகாரத்தை அடைந்து சேதனமாகவும் அசேதனமாகவும் பாஸிக்கிறது என்கிறார்.

ப்ரக்ருதி புருஷ தத்வம் -  அசித் என்ற மூலப்ரக்ருதி மூன்று வகையாகும். அவை முறையே ப்ரக்ருதி, காலம், சுத்தஸத்வம் என்பன. ப்ரக்ருதியில் ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்கள் உள்ளன. இவை முறையே ஸத்வகுணத்தால் ஞானாநந்தத்தையும், ராஜோகுணத்தால் காம க்ரோதங்களையும், தமோ குணத்தால் வெறுப்பையும் ஓய்வையும் ஏற்படுத்தும். ப்ரளயகாலத்தில் இந்த முக்குணங்கள் ஸமமாக இருப்பதால் எதிலும் மாறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. இவை மாறுபடும்போது ஆக்கல் காத்தல் ஆகியன ஏற்பட்டு மஹத்திலிருந்து அஹங்காரமும், அஹங்காரத்திலிருந்து ஐந்து ஞானேந்த்ரியங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள் ஏற்பட்டு அத்துடன் ஐந்து பூதங்கள்,  ஐந்து பூதாதி குணங்களான சப்தாதிகள் ஐந்து, இத்துடன் மனஸ் ஆக 24 தத்வங்கள் கூறப்படுகின்றன. 25வது தத்வம் ஆத்மா ஆகும்.
இந்த 25 தத்வங்களும் பரமாத்மாவுக்கு ஆபரணங்களாகவும் ஆயுதங்களாகவும் இருக்கினறன என ஸ்ரீவைகாநஸ ஸ்ரீசாஸ்த்ரம் கூறுகிறது.
   संसारचक्रं यत् तस्य निजं तत्स्यात्सुदर्शनम्। हंसाख्यं चेतनारूपं सर्वप्राणिहृदि स्थितम्। तच्छङ्खरूपं देवस्य पाञ्चजन्याख्यमुच्यते।। 
சுத்தஸத்வம் என்பது ஸ்வயம் ப்ரகாசமானது. தானிருப்பதைத் தானே காட்டும் தன்மையைக் கொண்டது. இது ப்ரக்ருதியின் குணங்களிலிருந்து வேறுபட்டது. இங்கு ஸத்வகுணம் அதிகமாக ஏற்பட்டால் மோக்ஷம் பற்றிய தெளிவு உண்டாக்கப்படுகிறது.

ஈச்வரன் -  எதனிடமிருந்து இந்த பூதங்கள் உண்டாகின்றனவோ,  உண்டானவை எதனால் வாழ்கின்றனவோ, ப்ரளய காலத்தில் எதை அடைகின்றனவோ அதை அறிவாயாக – அதுவே ப்ரஹ்மம் (ஈச்வரன்). இவ்வுலகம் முதலில் ஸத்தாகவே இருந்தது, ஒன்றாகவே இருந்தது, இரண்டற்றதாயிருந்தது, ஸத்யமாகவும், ஞானமாகவும், அநந்தமாகவும் இருக்கும் தன்மைகளை ஸ்வரூப நிரூபகமாகக் கொண்டவன், ஆநந்தமே ப்ரஹ்மம், நாராயணனே பரப்ஹ்மம் என்ற பரப்ரஹ்ம-பரதத்வ, பரஞ்ஜ்யோதி பதங்கள் ஸ்ரீமந்நாராயணனையே பிரதிபாதனம் செய்கின்றன.
यतो वा इमानि भूतानि जायन्ते।  येन जातानि जीवन्ति। यत्प्रयन्त्यभिसंविशन्ति। तद्विजिज्ञासस्व। तद्ब्रह्मेति। सदेव सोम्येदमग्र आसीत्। एकमेवाद्वितीयम्। सत्यं ज्ञानमनन्तं ब्रह्म। आनन्दो ब्रह्मेदिव्यजानात्। नारायण परं ब्रह्म। इत्यादिभिः परब्रह्म-परतत्व-परञ्ज्योतिः-परमात्मादि शब्दवाच्यः श्रीमन्नारायण एव।।

 எம்பெருமானின் (ஈச்வரனின்) மற்ற கல்யாணகுணங்கள் அவருடைய திவ்யமங்கள விக்ரஹங்களுக்கு நிரூபிதஸ்வரூப விசேஷணமாயிருகின்றன.
  ज्ञान-शक्ति-बल-ऐश्वर्य-वीर्य-तेजांसि गुणाः। இந்த ஆறு குணங்களும் பரத்வத்துக்கு உறுப்பானவையாகும். இத்துடன் பெரியவன் தாழ்ந்தவர்களோடு ஒன்றாகக் கலந்து பரிமாறுகையாகிற ஸௌஸீல்யம், தோஷங்களையே குணமாக ஏற்றுக்கொள்ளும் வாத்ஸல்யம், எளிமையாகிற ஸௌலப்யம் போன்ற அனைத்தையுமுடைய ஈச்வரரான பரமபுருஷன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என்று ஐந்து படிப்பட்டவனாய திவ்யமங்கள விக்ரஹங்களோடு எழுந்தருளியிருக்கிறார்.
இதை அர்ச்சனா நவநீதத்தில் கூறுகிறார் –
परत्वं निष्कलं प्रोक्तं व्यूहं सकलमुच्यते। वैभवास्त्ववताराणि हृद्गदञ्चान्तरात्मकम्।
प्रतिमादिषु सान्निध्यं विमानार्चनमुच्यते।।
பரத்வம் என்பது வர்ணிக்கமுடியாதது என்றும், வ்யூஹம் என்பது ஜீவன் முக்தர்களால் மட்டும் அறியக்கூடியது என்றும் விபவமென்பது மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள் என்றும் மனதில் த்யானித்து வழிபடுவது அந்தர்யாமி என்றும் விக்ரஹங்களில் எழுந்தருளியிருப்பது அர்ச்சாவதாரம் என்றும் சொல்லப்படுகிறது.

பரத்வம் என்பது குணானுபவர்களான பக்தர்களோடும் கைங்கர்யநிஷ்டர்களான பாகவதர்களோடும் எழுந்தருளியிருக்கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீசாஸ்த்ரமான வைகானஸத்தில் அனைத்து அண்டங்களுக்கும் மேலே பழமையானதாய், நித்யமானதாய், நினைத்ததர்கரியதாய், தேவர்களாலும் காணமுடியாததாய், எப்போதும் நித்யஸூரிகளாலும் முக்தபுருஷர்களாலும் மட்டுமே அனுபவிக்கப்படுவதான விஷ்ணுவின் உலகம் என்று விஷ்ணுவின் பரத்வம் சொல்லப்பட்டுள்ளது.
परत्वं नाम – वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पतिः। आस्ते विष्णुरचिन्त्यात्मा भक्तैः भागवतैस्सह।।
श्रीशास्त्रे – सर्वेषामण्डानामुपरि सनातनं नित्यमचिन्त्यं देवैरप्यनभिलक्ष्यं नित्यशुद्धमुक्तस्वभावपुरुषैरनुभूयमानं वैष्णवाण्डम्। तत्र विष्णुलोकाश्चत्वारः, आमोदः प्रमोदः, संमोदः, वैकुण्ठमिति। एकैकस्योपरि यथाक्रमेण भवति। तस्मिन् हेममयप्राकार गोपुरतोरणशतसहस्रैः कनककमलकुसुमादिभिरपि अलङ्कृतः अमृतजलपूर्णैः शतसहस्रैश्च सरितां प्रभासमाने दिव्ये लोके सहस्रादित्यसंकाशं हेममयं द्वादशतलैर्युत विमान नित्यज्ञानक्रियैश्वर्यब्रह्मादिदेव ऋषिभिः नित्यपरिजनैर्युतं मन्दिरम्। तस्मिन् व्योमनिलये परमात्मा स्वसङ्कल्पेन देवीभूषणायुधैः सह आमोदे विष्णुः, प्रमोदे महाविष्णुः, संमोदे सदाविष्णुः वैकुण्ठे सर्वव्यापी नारायणः आसीनो भवेत्।

வ்யூஹம் இரண்டுவிதமானது. தைவிகம், மானுஷம் என்று. தைவிகம் ஸ்ரீவைகாநஸத்தில் சொல்லப்பட்ட விஷ்ணுமூர்த்திகள். மானுஷம் என்பது வாஸாதிகாரத்தில் ப்ருகு கூறுகிறார் – தர்மம், ஞானம், ஐச்வர்யம், வைராக்யம் என்ற நான்கு குணங்களும் புருஷன் முதலான நான்கும் வ்யூஹங்களிடம் காணப்பட்டுகின்றன. இவை அனைத்தையும் சேர்ந்திருக்கப்பெற்றவன் பகவான். அனைத்திலும் வ்யாபித்திருக்கும் தன்மையை இயல்பாகக் கொண்டவராகையால் விஷ்ணு என்கிறோம். உண்டாகிய அனைத்தையும் நிறைப்பவனாகையால் முதல் வ்யூஹம் புருஷன் என்கிறோம் என்பதாக வ்யூஹத்தின் பெருமை பேசப்படுகிறது.
व्यूहो द्विविधः दैविको मानुषश्चेति। दैविकः श्रीवैखानसोक्तविष्ण्वादिकः। मानुषः – वासाधिकारे भृगुः –
वक्ष्यामि पञ्चमूर्तीनां भेदं मुनिवराः पृथक्। धर्मो ज्ञानमथैश्वर्यं वैराग्यमिति तत् पृथक्।
व्यष्टिरूपेण सम्पन्ना मूर्तयः पुरुषादयः। एषां समष्टिरूपोयं भगवानिति चोच्यते।
सर्वव्यापकशीलत्वात् विष्णुरित्यभिधीयते। उदिता पूरणेनेति पुरुषः परिकीर्तितः।।

விபவம் – மத்ஸ்யம் முதலான அவதாரங்கள். ஸ்ரீராமன் ஸ்ரீகிருஷ்ணன் முதலானவையும் விபவரூபங்களாகும்.
वैभवाः – मत्स्याद्यवताराः। श्रीरामकृष्णादि विभवरूपाः।।

அந்தர்யாமி – அனைத்து ஜனங்களையும் உள் நுழைத்து நியமிப்பவன் – இது போன்ற வேத வாக்கியங்களில் சொன்னபடி அனைவருடைய மனதிலும் கண்ணுக்குத் தெரியாத உருவத்துடன் நிற்கும் நிலை ஆகும்.
अन्तर्यामित्वं नाम – अन्तः प्रविष्टः शास्ता जनानाम्  इत्यादि श्रुतेः सर्वहृदयेषु सूक्ष्मरूपेण स्थितत्वम्।
அர்ச்சாவதாரம் – விக்ரஹத்தின் அமைப்புக்குத் தக்கவாறு ஸ்வரூபத்தை எடுத்துக்கொண்டு அந்த விக்ரஹத்தில் வந்து எழுந்தருளல் என்று கூறப்படும் நிலை அர்ச்சாவதாரமாகும். ஸ்வாமியினுடைய பரவ்யூஹ நிலைகளை நித்யமுக்தர்கள் அனுபவிக்கின்றனர். விபவாவதாரங்கள் அந்தந்தக் காலங்களில் இருந்தவர்கள் அனுபவித்தனர். அந்தர்யாமியை யோகஸித்தி பெற்று பரிசுத்தியடைந்தவர்களே அனுபவித்தனர். ஆனால் அர்ச்சாவதாரத்திலோ அனைவருக்கும் எவ்விதத்தடையின்றி அனுபவிக்க அதிகாரமுண்டு என்கிறார். அர்ச்சாவதார விஷயத்தில் உத்தேச்யமாக குணங்களைச் சொல்லத் தொடங்கினால், என்னால் நூற்றுக்கணக்கான வருடங்களில் அவற்றைச் சொல்ல இயலாது என்கிறார் கேசவாசாரியர்.
अर्चावतारो नाम – बिम्बाकृत्यात्मना बिम्बे समागत्यावतिष्ठते। अर्चनानवनीते श्री केशवाचार्यः –
नित्यमुक्तोपभोग्यत्वात् परव्यूहात्मनो हरेः। तत्कालसन्निधानेन लक्ष्यत्वात् विभवात्मनः।।
विशुद्धैः योगसंसिद्धैः चिन्त्यत्वादन्तरात्मनः। अर्चात्मन्येव सर्वेषाम् अधिकारो निरङ्कुशः।।
अर्चावतारविषये मयाप्युद्देशतस्था। उक्ता गुणा न शक्यन्ते वक्तुं वर्षशतैरपि।।

ஸித்தோபாயம் – ஸ்ரீவைகாநஸர்களுக்கு அவர்களுடைய விஷ்ணுபலி ஸம்ஸ்காரத்தினாலேயே ப்ரபத்தி ஏற்பட்டு விடுகிறது. ஸ்ரீவைகானஸர்கள் ப்ரபன்னர்களில் தலைசிறந்தவர்கள். நாராயணபராயனர்கள் அதாவது நாராயணனை மேலானகதியாக உடையவர்கள். இங்கு கதி என்பது உபாயத்தைக் குறிக்கிறது. விஷ்ணுவின் ப்ரபன்னனுக்கே ஆராதனத்தில் அதிகாரம் உண்டு என்பதால் ஸ்ரீவிகநஸர் கர்ப்பத்திலேயே விஷ்ணுபலியாகிய ப்ரபத்தியை விதித்தார். ஸ்ரீவைகாநஸ கல்பசூத்ரப்படி நிஷேகாதி ஸம்ஸ்காரங்களைப் பெற்ற க்ருஹஸ்தனோ ப்ரஹ்மசாரியோ பக்தியுடன் விஷ்ணுவின் ஆராதனத்தை தொடங்க வேண்டும் என்கிறார். இங்கு வைகாநஸர்களுக்கு நேரடியாக விஷ்ணுவே ஸித்தமான உபாயம் ஆகிறார்.
श्रीवैखानससूत्रिणः प्रपत्तौ मुख्याधिकारिणः प्रपन्नतमाश्च। तेषां स्वसूत्र एव भगवता विखनसा प्रपत्यभिधानात् मुख्याधिकारित्वम्। विष्णुबलिकर्मणा वैदिकप्रवृत्तेः सम्भवात् प्रपन्नतमत्वम्। तथाहि कल्पसूत्रक्रमे तपो योगात् ऋषिः, नारायणपरायणो निर्द्वन्द्वो मुनिः इति। पूर्वात्पूर्वात्परो वरीयानिति विज्ञायते इति च। अत्र मुनि शब्दवाच्यत्वं प्रपन्नस्योक्तम्।।

ஸாத்யோபாயம் -   ஸாத்யோபாயம் பலவிதமாகக் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்தை உபாஸிப்பவர்களுக்கே முக்தி, முக்தியடைய ஞானமே சிறந்த வழி, சரணாகதி, ஆத்ம ஸமர்ப்பணம், கர்மயோகமே மோக்ஷோபாயமாகும் என்கிறார்.
ஆனால் ஸ்ரீமத்விகநஸர் விக்ரஹத்துடன் கூடிய ப்ரஹ்மத்தை த்யானிக்கும்படி கூறியுள்ளார். மரீசி மஹரிஷியும் எம்பெருமானின் ஆராதனம் ஜபம், ஹுதம், அர்ச்சனம், த்யானம் என நால்வகைப்படும் என்கிறார். எனவே ஸாத்யோபாயம் அவரவர் அதிகாரத்தின்படி ஏற்படலாம். ஸ்ரீமத்விகநஸர் ஆராதனத்தின் முடிவில் ஒவ்வொரு வேளையும் த்வாதஸ அஷ்டாக்ஷரத்தால் புஷ்பாஞ்சலி செய்யச் சொல்கிறார். இதனால் எம்பெருமானிடம் ஏற்படும் அபசாரங்கள் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஸ்ரீவைகானஸனும் ஸ்ரீவிஷ்ணுவை பக்தியுடன் வீட்டில் அல்லது ஆலயத்தில் அர்ச்சிப்பதால் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான் என்று கூறப்பட்டுள்ளது. பக்தி ப்ரபத்தியுடன் கூடிய பகவதாராதனமே நேரடியான ஸாத்யோபாயம் என உறுதி செய்யப்படுகிறது. 
साध्योपायस्तु बहुधा अवगम्यते। तथाहि ब्रह्मविदाप्नोति परम् इति श्रुतेः। ज्ञानिन एव मुक्तिरिति प्राहुः। अपरे तु मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये इति श्रुत्या मामेकं शरणं व्रज इति भगवद्वचनाच्च प्रपत्तिरेव मुक्त्युपाय इति।।
श्रीशास्त्रे भगवान् मरीचिः – अथ समाराधनं चतुर्विधम्। जपहुतार्चनध्यानमिति।
श्रीविखनाः- द्वादशाष्टाक्षराभ्यां  पुष्पाणि ददाति। तं यज्ञपुरुषं ध्यायन् पुरुषसूक्तेन संस्तूय प्रणामं कुर्यात्। तस्मात् गृहे देवायतने वा भक्त्या भगवन्तं नारायणमर्चयेत्। तद्विष्णोः परमं पदं गच्छतीति विज्ञायते। भक्तिप्रपत्तिसहितभगवदाराधनमेव भगवत्पदप्राप्ताव्यवहितसाध्योपाय इति निश्चीयते।। 

ஸ்ரீவைகாநஸர்களின் மோக்ஷஸ்வரூபம் – ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்கள் ஸ்ரீமந்நாராயணனை தினமும் ஆராதனம் செய்வதனாலேயே அடையப்படும் மோக்ஷஸ்வரூபமானது கூறப்படுகிறது. பொதுவாக ஸ்ரீவைகாநஸர்கள் கர்ப்பவைஷ்ணவர்கள் என்பதால் ஸ்ரீவிஷ்ணுவின் ப்ரபன்னர்களாகின்றார்கள். ஸ்ரீவைகாநஸ கல்பசூத்ரத்தில் கூறப்படுவதாவது – ஸ்ரீவைகாநஸர்களுக்கு மோக்ஷமடையும் காலம் வந்தவுடன் சுக்லபக்ஷம், பகல், உத்தராயணமான ஆறுமாதஙகளில் அக்னி ஜ்யோதிஸ் போன்ற அபிமானி தேவதைகளின் ஸ்தானங்களின் வழியாக ப்ரஹ்மத்தின் பரமபதத்தை நிறந்தரமாக அடைகின்றனர்.

श्रीवैखानसप्रपन्नानाम् आराधकगतिमार्गः – भगवता विखनसा पूर्वं कल्पसूत्रे अथाग्नौ नित्यहोमान्ते विष्णोः नित्यार्चा .......... तद्विष्णोः परमं पदं गच्छतीति विज्ञायते इति तत्पदप्राप्तिमात्रमुक्ता। परं तस्य गतिप्रकारे – प्राप्ते प्रयाणकाले शुक्लमहोमासाः षडुत्तरायणं अग्निर्ज्योतिरित्यनेन यथा ब्रह्मपदं अपुनरावृत्त्याभ्येति।

மரீசி மஹரிஷி கூறுகிறார் – நிவ்ருத்திகர்மாவினால் பரப்ரஹ்மமான ஸ்ரீமந்நாராயணனை உபாஸிப்பதால் ப்ரபத்தி முதலான மார்க்கத்தில் ஈடுபட்ட ஜீவனின் ஸ்தூலசரீரம் அழிந்தவுடன் ஸூக்ஷ்மசரீரத்தில் இருப்பவனாய் ஸுஷும்னா நாடியின் வழியாக ப்ரஹ்மரந்த்ரத்தைப் பிளந்து மேலே செல்கிறான். அர்ச்சிஸ்ஸுக்கு வேண்டிய தேவதையின் இடத்தை அடைகிறான். பின்பு பகலின் அபிமானி தேவதாஸ்தானத்தைக் கடந்து, சுக்லபக்ஷ அபிமானி தேவதாஸ்தானத்தைக் கடந்து, உத்தராயணமான ஆறு மாதங்களின் அபிமானி தேவதாஸ்தானத்தையும், ஸம்வத்ஸரமெனும் வருடத்தின் அபிமானி தேவதாஸ்தானத்தையும் ஆதித்ய ஸ்தானத்தையும் ஸோமராஜனின் ஸ்தானத்தையும் வைத்யுதஸ்தானத்தையும் அடைகிறான் என்று கூறுகிறார்.
अत्र मरीचि महर्षिः – अपुनरावृत्तिहेतुभूतनिवृत्तिकर्मणा परब्रह्मोपासनात् प्रपत्यादिमार्गतो जीवः पूर्ववत् पाञ्चभौतिकप्रलयावसाने सूक्ष्मदेहस्थः सुषुम्नानाडीमधिवसन् ब्रह्मरन्ध्रं भित्वा प्रवृत्तोSरर्चिरभिसंभवति। अर्चिषोSहः, अह्नश्शुक्लपक्षं, तस्मादुत्तरायणषण्मासान्, ततस्संवत्सरं, तस्मादादित्यं, ततस्सोमं राजानं ततो वैद्यते इति।। 
பகவத்கீதையில் பகவானுடைய வாக்கியம் – குந்தீபுத்திரனான ஹே அர்ஜுன – ப்ரஹ்மலோகம் வரை உள்ள அனைத்து உலகங்களுமே திரும்பி வரும் தன்மையுடையவை. என்னை அடைந்தால் மட்டுமே மறுபிறவி ஏற்படாது என்கிறார்.
भगवद्गीतायाम् आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोSर्जुन। मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते।। इति।
चत्वारः पथयो देवयानाः – என்கிற வேத வாக்கியம் பரமபதத்துக்கு செல்லும் வழி நாலுவிதமாகும். எவர்கள் வாஸனையுடன் புண்யபாபங்களை நீங்கப்பெற்றவர்களாய் நல்வழியை அடைகிறார்களோ, அவ்வழியில் நீங்களும் செல்லுங்கள், அனைத்து உலகிற்கும் இருட்டைப் போக்கவல்ல ஸூரியன் தான் இவ்வழியின் வாயிலெனப்படுகிறான் எனக் கூறப்பட்டுள்ளது. தேவயான மார்க்கம் நான்குவிதம் என்று நிரூபித்து இவ்வாத்மா தேவமயமான பிறவியையடைந்து பகவானை அடைகிறது.
ஸ்ரீசாஸ்த்ரத்தில் மரீசி மஹரிஷி வேதவாக்கியத்தின்படி அர்ச்சிராதிமார்க்கத்தால் ப்ரஹ்மஞானிகளாய் பகவானை ஆராதிப்பவர்களாய் உள்ளவர்களுக்கு மோக்ஷமேற்படுகிறது என்கிறார். அவரவர்களின் உபாஸனைக்கிணங்க அந்தந்த ஸ்தானத்தை அடைகின்றனர். விஷ்ணுவின் லோகங்களில் சிலர் வஸிக்கிறார்கள். இது ஸாலோக்யம் எனப்படும் ஆமோதம் என்கிற இடமாகும். சிலர் ஸ்ரீமந்நாராயணனுக்கு ஸமீபத்தில் இருக்கும் நிலையை அடைகிறார்கள். இது ஸாமீப்யம் எனப்படும் ப்ரமோதம் என்கிற இடமாகும். சிலர் ஸ்ரீமந்நாராயணனோடு ஒத்த உருவத்தை அடைகின்றனர். இது ஸாரூப்யம் எனப்படும் ஸம்மோதம் என்கிற இடமாகும். வேறு சிலர் ஸ்ரீமந்நாராயணனோடு சேர்ந்த அனுபவத்தை உடையதாக இருக்கின்றனர். இது ஸாயுஜ்யம் எனப்படும் வைகுண்டமாகும். இந்த மோக்ஷம் தான் முக்கியமெனப்படும். இதைத்தான் பகவானுடைய உலகமாய் ஆமோதம், ப்ரமோதம், ஸம்மோதம், வைகுண்டம் என்று அழைக்கின்றனர். ஸாயுஜ்யமெனும் வைகுண்டானுபவத்தில் ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் வேறுபாட்டைக் காணமுடியாது. இதை ஸார்ஷ்டிதா என்பர். அதாவது ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் வேறுபாட்டின்மை என்பர்.
मोक्षस्वरूपे मरीचिः - संसारबन्धनवासनान्मुक्तिः मोक्षः। तदपि समाराधनविशेषः चतुर्विधपदावाप्तिः सालोक्यं सामीप्यं सारूप्यं सायुज्यमिति। आमोदप्राप्तिः सालोक्यम्। प्रमोदप्राप्तिः सामीप्यम्। सम्मोदप्राप्तिः सारूप्यम्। वैकुण्ठप्राप्तिः सायुज्यमिति।  
ஸ்ரீமந்நாராயணம் அர்ச்சயேத் என்பதால் ஸ்ரீவைகாநஸர்கள் பிறப்பினாலேயே பஞ்சகாலபராயண பரமைகாந்திகளாகின்றனர். ப்ருகு மஹரிஷி அபிகமனம் முதலான பஞ்சகாலத்தைப் பற்றி குறிப்பிடுகையில் காலை வேளையில் அபிகமனமும் அதன் பிறகு உபாதானமும், மாத்யாஹ்னிகத்தில் இஜ்யையும், பிற்பகலில் ஸ்வாத்யாயமும், மாலையில் யோகமும் செய்வதே பஞ்சகாலம் எனப்படும் என்கிறார். அதாவது அர்ச்சனத்துக்கு முதலில் அபிகமனமும் உபாதானமும் முக்கியம் செய்யவேண்டும். அதனைத் தொடர்ந்து ஆராதன ஸ்வரூபமான இஜ்யை முக்கியமாகும். பிறகு ஸ்ரீமந்நாராயணனின் ஸ்வரூபத்தை விளக்கும் ஸ்ரீசாஸ்த்ரமான ஸ்வாத்யாயமும், ஸ்ரீவிஷ்ணுவின் ஸ்வரூபத்தை த்யானிப்பது போன்றவை யோகம் எனப்படும் என்கிறார்.
पञ्चकालतत्वं परमैकान्तित्वं च श्रीवैखानससूत्रिणां निसर्गसिद्धम्। स्वशास्त्रविहितत्वात्, सूत्रकारमारभ्य तेषां अविच्छेदेन नारायणैकनिष्ठत्वाच्च। सूत्रकारेण श्रीमन्नारायणमर्चयेत् इति विहितस्यार्चनस्य आदौ अभिगमनोपादानयोः आवश्यकतासिद्धिः। तदानुगुण्येन ततस्वरूपेज्यासिद्धिं पश्चात् भगवत्स्वरूपप्रतिपादकशास्त्रानुसन्धानरूपस्वाध्यायस्य तत्स्वरूपचिन्तनस्य च आवश्यकतासिद्धिः प्राप्यते। भृगुः – प्रातः कालेSभिगमनमुपादानं ततः परम्। मध्याह्न इज्यां कुर्वीत स्वाध्यायं चापराह्णके। योगं च सायङ्काले तु पञ्चकाल उदाहृतः।।
ஸ்ரீவிகநஸர் கல்பஸூத்ர தர்மத்தில் ஆசாரத்தைப் பற்றி கூறுகையில் ஸ்ரீவைகாநஸர்கள் – மனத்தினாலே த்யானம் செய்கின்றனர், பகவானைச் சொல்லும் ஸ்ரீசாஸ்த்ரங்களை செவியாலே கேட்கின்றனர், கண்களாலே எம்பெருமானின் திவ்யமங்கள திருமேனியை காண்கின்றனர், மூக்காலே ஸ்வாமிக்கு கண்டருளச்செய்த ப்ரஸாதவாஸனையை அனுபவிக்கின்றனர், கைகளாலே ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றனர் எனக் கூறியுள்ளார்.
सूत्रकारः धर्मे संभक्ताचारं ब्रूते  - मनसा ध्यानं कुर्वन्ति। तत्प्रतिपादनागमं श्रोत्रेण श्रुण्वन्ति। चक्षुषा देवताSSकारं  पश्यन्ति। घ्राणेन गन्धं अनुभवन्ति।पाणिना देवतां नमस्कुर्वन्ति इति।

ஸ்ரீமந்நாராயணனையே அனைத்துமாகக் கொண்டவர்களான ஸ்ரீவைகாநஸர்கள் எந்த காரியத்தைச் செய்தாலும் அது பகவதர்ச்சனமாகும். எந்த வார்த்தையைப் பேசினாலும் அது பகவானைப் பற்றிய ஜபமாகும், எதை நினைத்தாலும் அது பகவத் தியானமாகும். இப்படிப்பட்ட பாகவதனுடைய ஸ்ரீபாததீர்த்தம் ஒப்பற்றதாகும், அவர்கள் உண்டு ஸ்வீகரித்த சேஷம் பரமபாவனமாகும், வார்த்தைகள் மந்த்ரங்களாகும், தொடப்பட்டது பரிசுத்தமாகும் இவ்வாறு ஸ்ரீவைகாநஸ பஞ்சகாலபராயணர்களின் பெருமைகள் கூறப்படுகின்றன.
नारायणैकनिष्ठस्य या या वृत्तिस्तदर्चनम्। यो यो जल्पस्स स जपः तत् ध्यानं यन्निरीक्षणम्।
तत्पादांब्बतुलं तीर्थं तदुच्छिष्टं सुपावनम्। तदुक्तिमात्रं मन्त्राग्र्यं तत्स्पृष्टमखिलं शुचि।। इति।।
ஸ்ரீந்ருஸிம்ஹவாஜபேயி தினமும் ஸ்வாமிக்கு பஞ்சகண்டத்தின்படி திருவாராதனம் செய்வதாலேயே ஸ்ரீவைகாநஸர்கள் அர்ச்சிராதி மார்க்கத்தால் மோக்ஷத்தை அடைகிறார்கள் என்று கூறுகிறார். அதாவது எம்பெருமானை அர்ச்சிக்கும் அர்ச்சகர்கள் நீண்ட ஆயுளை அடைந்து செல்வம், மனைவி, ஸத்புத்ரன், சொந்தவீடு, நிலம், புகழ் போன்றவற்றை அடைந்து இவ்வுலகில் வெகுநாட்கள் சௌகர்யங்களைப் பெற்று வாழ்நாள் முடிவடையும் சமயத்தில் எம்பெருமானைப் போன்று சங்கு சக்ரங்களைத் தரித்து அவருடைய உருவத்தையும் நிறத்தையும் அடைந்து கருடவாஹனத்தில் அமர்ந்து ஆகாசத்தில் அனைத்து தேவர்களும் நமஸ்கரிக்க ஸூர்யமண்டலத்தின் வழியாக சந்திர மண்டலத்தை அடைந்து பின்பு அனைத்து மண்டலங்களையும் தாண்டி ஸத்யலோகமான ஸ்ரீவைகுண்டத்தில் இவ்வுலகின் மூலகர்த்தாவாக இருப்பவருடன் எப்பொழுதும் ஆனந்தத்தையுடையதும் அம்ருதத்தையுடயதும் மனநிறைவுடனும் மறுபடியும் பிறவியின்மையை அடைந்து நிரந்தரமாக பரஞ்ஜோதியான ஸ்ரீமந்நாராயணனுடன் ஒன்றாகக் கலக்கிறார்கள் எனக் கூறுகிறார். இதுவே ஸ்ரீவைகாநஸ அர்ச்சகர்களின் மோக்ஷத்தின் பெருமையாகும்.
तस्मात् काले योर्चSकः यदि सेवन्ते स दीर्घायुः श्रीपुत्रदारगृहक्षेत्र आरामयशस्सम्पदश्च इहलोके चिरमनुभूय देहावसाने सद्यः शङ्खचक्रधरः श्यामलाङ्गः चतुर्भुजोभूत्वा गगने गरुडारूडः सर्वदेव नमस्कृतः रविमण्डलं भित्वा तस्योपरि चन्द्रमण्डलं ध्यायन् गतिमार्गेन सर्वान् लोकानतीत्य सत्यस्थं सत्यलोके प्रतिष्ठितं अनादिजगद्बीजं अशेषविशेषं नित्यानन्दं अमृतरसपानवत् सर्वदातृप्तिकरं पुनरावृत्तिरहितं शाश्वतं परञ्ज्योतिः प्रविशति इति विज्ञायते।।
கல்பசூத்ர வ்யாக்யானத்தில் வாஜபேயி பாஷ்யத்திலும் பரமாநந்த ஸ்வரூபனான ப்ரஹ்மத்தோடு கூட எப்போதும் இருப்பதே மோக்ஷமாகும் என்கிறார். அதாவது ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் ஆனந்தமாகும். அது மோக்ஷத்தில் தான் வெளிப்படுகிறது. அங்கு ப்ரஹ்மம் அறிவாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட ப்ரஹ்மத்தோடு அதனுடைய அனைத்து கல்யாணகுணங்களையும் மோக்ஷமடைந்தவன் அனுபவிக்கிறான். இவ்வாறு தினமும் திருவாராதனம் செய்யும் ஸ்ரீவைகாநஸர்கள் ஸாயுஜ்யத்தையடைந்து ப்ரஹ்மத்தோடு ஆனந்தானுவப்ராப்தியை (மோக்ஷத்தை) அடைகின்றனர். மங்களானி பவந்து.

x

No comments: